சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க ஏர் சீனா (Air China) நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஜுலை மாதம் 3ம் திகதி முதல் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சிச்சுவானில் (Sichuan) இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வாராந்தம் மூன்று விமானங்களும், கட்டுநாயக்கவிலிருந்து சீனாவின் சிச்சுவானிற்கு மூன்று விமானங்களும் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.