சூடானில் இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் ஈத் அல்-ஆதாவின் முதல்நாளை முன்னிட்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துணை இராணுவத்தினரின் பிடியில் இருந்த 125 சூடான் இராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
சூடானில் ஜெனரல் அப்தெல்-ஃபத்தா புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் 11 வாரகாலமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மோதலில் ஏறக்குறைய 3000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.