பேருந்து கட்டணத் திருத்தங்களில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமற்றது என பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது போது கருத்து தெரிவித்த அவர், வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்துக்கு அமைய இம்முறை பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமற்றது எனக் கூறினார்.
12 பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும், கொவிட் பெருந்தொற்று காலத்தில் 20 சதவீதத்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
பேருந்து கட்டணத்தை குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பேருந்துகளுக்கான உதிரிபாகங்களின் விலை குறையவில்லை என்று தெரிவித்த அவர், இந்நிலையில் பேருந்து கட்டணங்களை குறைத்தால், தனியார் பேருந்து சேவை துரையினர் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.