யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று இன்று (30.06) அதிகாலை முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது.
மதுரங்குளி கரிகெட்ட பிரதேசத்திலேயே இவ்வாறு பேருந்து தீப்பிடித்து எறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், பயணிகள் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பயணிகளின் பயணப்பொதிகள் சேதமடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பில் தகவல் அறிந்ததும் புத்தளம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், பலவியா விமானப்படையின் தீயணைப்பு பிரிவினரும் விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்திய போதிலும் பேருந்து முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (29.06) இரவு சுமார் 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பஸ் பயணித்த பேருந்தே இவ்வாறு தீப்பற்றி இருந்துள்ளது.
தீ விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த பயணிகள் வேறு பேருந்தில் கொழும்பு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.