கார் திருட்டு – மூவர் கைது!

பொரலஸ்கமுவ, எம்பில்லவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஜுன் மாதம் 26ஆம் திகதி மோட்டார் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் கேரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகன் ஆர் கார் ஒன்றை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் ஒருவர் ஹோமாகமவில் வைத்து நேற்று (29.06) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த சம்பவத்திற்கு உதவிய மற்றுமொரு ஆணும் பெண்ணும் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்த திருடப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 34 வயதுடையவர்கள் மற்றும் ஹோமாகம மற்றும் ஹொரண பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பெண் உடுபுஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான பெண் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (30.06) நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Social Share

Leave a Reply