யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இவ்வருடத்தின் முதல் காலாண்டிலேயே துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2023 ஜனவரி மாதம் முதல் மே மாத இறுதிவரை பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.