லேடிரிஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் ஒருவர் குறித்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வைத்தியசாலையின் இயக்குநர் இதனை உறுதிசெய்துள்ளதுடன், வைத்தியரின் பெயர் வெளியிடப்படவில்லை.
குறித்த வைத்தியர் பற்றி பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் ஜி விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவருடன் பணிப்புரியும் சகவைத்தியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், இது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.
நான் அவர்களை பணிக்கு திரும்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் இது குழந்தைகளின் உயிர் தொடர்புபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட மருத்துவரிற்கு எதிராக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுவது இது முதல்தடவையில்லை என அரசமருத்துவ சங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.