பிரான்ஸின் Nanterre பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி காரை செலுத்திய 17 வயது சாரதி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ளன. 934 வாகனங்கள் மற்றும் 212 கட்டிடங்கள் உட்பட 1,521 பொதுச்சொத்துக்கள் மீது தீ வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 18 பொலிஸ் அதிகாரிகள், மற்றும் ஏழு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வணிக நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கலவரங்களை அடக்குவதற்காக சுமார் 40 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என கூறப்படுகின்ற நிலையில், பிரித்தானிய பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.