நாட்டில் பிரபல்யமான பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனம் கடந்த மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 341 கோடி ரூபா வரி செலுத்தவில்லை என்பதையும், அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதுபோல் பல நிறுவனங்கள் பல கோடி ரூபா வரி செலுத்தவில்லை எனக் கூறிய அவர், இந்த வரியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை எனவும் வங்குரோத்துக்கு மத்தியிலும் டீல் கொள்கையை செயற்படுத்தப்படுகிறது எனவும் விமர்சித்தார்.
மேலும் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடும் பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.