மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேசம், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேசம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.