நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
இன்று (03.07) காலை நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், கற்கள் புரளும் அபாயமும் காணப்படுவதால் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுள்ளது.