பொலிஸ் மா அதிபர் இன்றிச் செயற்படும் இலங்கை காவல்துறை!

நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும், பயங்கரவாதத்தை தடுப்பதற்கும், இலங்கை காவல்துறை, பொலிஸ் மா அதிபர் இன்றிச் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐஜிபி சி.டி. விக்ரமரத்ன ஓய்வுப் பெற்ற நிலையில், அந்த பதவி காலியாக உள்ளது, பதவிக்கான வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

36 ஆவது பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான பொருத்தமான பெயரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் அரசியலமைப்பு சபைக்கு சிபாரிசு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

அண்மை காலமாக இலங்கையில், துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் சம்பவங்கள் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன. பாதாள உலகக் கும்பல்களுக்கிடையிலான போட்டியினால் தூண்டப்படும் குற்றச் செயல்களை முறியடிக்க பொலிஸார் இரகசிய நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

இருப்பினும் பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டல் இல்லாமல் இந்த நடவடிக்கைகள் சுமூகமாகச் செயல்பட முடியுமா என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

Social Share

Leave a Reply