தனது கடமைகளை பொறுப்பேற்கும் உமாமகேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் வருகிற ஞாயிற்றுக்கிழமை (09.07) தனது கடமைகளை பொறுபேற்கவுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடமிருந்து அரச நியமனத்தினை பெற்றுக்கொண்ட அவர், தனது கடமைகளை பொறுபேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஆரம்ப கல்வியினை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையிலும் இடைநிலை கல்வியினை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்று வர்த்தக பிரிவில் அதி சிறப்பு சித்தி பெற்றுள்ளர்.

அத்துடன் உயர்கல்வியினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்திலும், முதுநிலை கல்வியினை கொழும்பு ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் கற்றுள்ளார்.

தனது கடமைகளை பொறுப்பேற்கும் உமாமகேஸ்வரன்!

Social Share

Leave a Reply