இலங்கை மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இன்று (08.07) பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளடங்கிய தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றது. இதில் விஷ்மி குணரட்ன 26(28) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் எடன் கார்சன், லெய்ஹ் காஸ்பெரெக், அமெலியா கேர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்றது. இதில் சூசி பேட்ஸ் 44(47) ஓட்டங்களையும், அமெலியா கேர் 34(28) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இனோஷி ப்ரியதர்ஷானி 3 விக்கெட்களையும், கவிஷா டில்ஹாரி, உதேஷிகா ப்ரபோதனி ஆகியோர் தல ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகியாக சூசி பேட்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது போட்டி நாளை மறுதினம் சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிட முடியும்.