தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (09.07) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புடலுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை வட்டகொட நகரில் இருந்து புடலுஓயா துனுகெதெனிய நோக்கி தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்றே வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி உயரத்திலிருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தோட்டத் தொழிலாளர்கள் சிலர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.