குருணாகல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் அடங்கிய பை மீட்பு!

குருணாகல் –  கிம்புல்வானா ஓயாவில் 108 தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பையில்  ரி-56 ரக 83 தோட்டாக்கள், எம்16 ரக 29 தோட்டாக்கள்,  16 எம்பிஎம்ஜி தோட்டாக்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தோட்டாக்களை யார் விட்டுச் சென்றார்கள் என்ற தகவல் கிடைக்கப்பெறாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கும்புல்கெடே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில், குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜகத் பண்டார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply