வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் கால்வாய்கள், மற்றும் வாவிகளை புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசனையின் பிரகாரம் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தலவத்துகொட ஏரி, திவவன்னா ஓயா, நாகஹமுல்ல ஏரி, கிம்புலாவல கால்வாய், பத்தரமுல்லை மற்றும் மூன்று பாலங்களுக்கு அருகிலுள்ள கால்வாய் உட்பட பல ஏரிகள் மற்றும் கால்வாய்களின் புனரமைப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.