துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் வண்டி மோதி விபத்து – ஒருவர் பலி!

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியின் கோரக்கன பிரதேசத்தில் பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (11.07) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் சைக்கிளில் பயணித்தவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் என் போலீசார் அறிவித்துள்ளனர்.

வாதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply