மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள குறித்த மசாஜ் நிலையத்தில் நேற்று (13.07) மாலை முன்னெடுக்கப்பட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27, 41 மற்றும் 67 வயதுடைய பயாகல, நொச்சியாகம மற்றும் கடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இன்று (14.07) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.