50 கிலோ எடையுள்ள MOP உரம் நாளை (15.07) முதல் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது 15,000 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை MOP உரம் நாளை முதல் 14,000 ரூபாய்க்கு விற்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த உரத்தின் விலை 19,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவாக இதுவரையில் 4500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.