செஃப்ட்ரியாக்ஸோன் மருந்தினால் மற்றுமொரு பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சர்ச்சைக்குரிய செஃப்ட்ரியாக்ஸோன் (Ceftriaxone)  மருந்தை செலுத்தியதன் பின்னர் ஏற்பட்ட உபாதை காரணமாக பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே கண்டி மருத்துவ அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் கடந்த 13ஆம் திகதி கண்டி பொது வைத்தியசாலையின் 31ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உபாதைகள் ஏற்பட்ட நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில் பேராதனை வைத்தியசாலையில், குறித்த மருந்தை செலுத்தியதன் காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமையால் 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

Social Share

Leave a Reply