ஆழ்கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகு!

வாழைச்சேனையில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு ஒன்று நேற்று (16.07) ஆழ்கடல் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது.

குறித்த படகில் ஐந்து மீனவர்கள் தொழிலுக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விடயம் குறித்து கடற்படையினருக்கு அறிவிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை குறித்த படகில் இருந்த மீனவர்களை காப்பாற்றுவதற்காக சிறிய படகு ஒன்றும் அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

தற்போது மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply