இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய அறிவிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்புப் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கடைபிடிக்காத அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை 770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஐம்பது வீத எரிபொருள் இருப்பை பராமரிக்காது போனால், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான விதிகளை பின்பற்றாத ராஜகிரியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், யாழ்ப்பாணம் காரைநகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் இவ்வாறு கையகப்படுத்தப்பட இருப்பதாக என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply