இந்தியா, பாகிஸ்தான் A அணிகள் அரை இறுதியில்

ஆசிய வளர்ந்து வரும் அணிகளுக்கான கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் A அணிகள் அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளன.

பாகிஸ்தான் A அணி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் A அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் A அணி 184 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் A அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 309 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷகிப்ஷதா பர்கான் 63 ஓட்டங்களையும், கம்ரான் குலாம் 63 ஓட்டங்களையும், சைம் அயூப் 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் யாஷ் ஜியானானி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 29.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றனர். பாகிஸ்தான் அணி சார்பாக குவாஸிம் அக்ரம் 6 விக்கெட்களை கைப்பற்றினார். சுபியான் முஹீம் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்தியா A மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடிப்பாடிய நேபாளம் அணி 39.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ரோஹித் பௌடல் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் இந்தியா A அணி சார்பாக நிஷாந்த் சிந்து 4 விக்கெட்களையும், ராஜ்வர்தன் ஹங்கேர்க்கர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா A அணி 22.1 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் அபிஷேக் ஷர்மா 87 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 58 ஒட்டங்களையும் பெற்றனர்.

இந்த இரு அணிகளும் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்ப்பை பெற்றுள்ளன. மூன்றாவது போட்டியாக தங்களுக்குள் மோதவுள்ள நிலையில் வெற்றி பெறுமணி முதலிடத்தை பெற்றுக் கொள்ளும்.

நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் A அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளன.

Social Share

Leave a Reply