வவுனியாவில் கார் ஒன்றை திருடிச் சென்ற வேளையில் வவுனியா நீதிமன்றத்துக்கு அருகாமையில் கார் வீதியினை விட்டு பாய்ந்தமையினால் விபத்துக்குளாகியுள்ளது.
வவுனியா பூங்காவிற்கு முன்னே திறப்புடன் காரை ஒருவர் நிறுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனை அவதானித்த ஒருவர் அந்த காரை திருடி எடுத்து சென்றுள்ளார். இந்த நிலையிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரை திருடிச் சென்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. கார் பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.