இலங்கை உலக கிண்ண தொடருக்கு தெரிவானது

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலக கிண்ண 20-20 தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலமாக இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இலங்கை அணியின் குழுவில் இலங்கை அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றமையினால் அடுத்து இரண்டாம் சுற்று உறுதியாகியுள்ளது.

நம்பிபியா அணியுடன் முதற்போட்டியில் வெற்றி பெற்றதோடு இன்றைய வெற்றியும் இலங்கை அணியினை அடுத்து சுற்றுக்கு தெரிவு செய்துள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது இதில் வனிது ஹசரங்க 71(47) ஓட்டங்களையும் பத்தும் நிஸ்ஸங்க 61(47) ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் ஜோஷ் லிட்டில் 4 விக்கெட்களையும் மார்க் அதைர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்றது. இதில் அன்டி பல்பிரைனி 41 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சில் மகேஷ் தீக்சன 3 விக்கெட்களையும், லஹிரு குமார, சமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

உலகக்கிண்ண 20-20 தொடரின் இன்றைய முதலாம் போட்டியாக நெதர்லாந் மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் நமீபியா அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய நெதர்லாந் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. இதில் மஸ் ஓ டோவ்ட் 70(56) ஓட்டங்களையும், கொலின் அக்ரிமேன் 35(32) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜான் பிரைலின்க் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 4 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது இதில் ஆட்டமிழக்காமல் டேவிட் வைஸ் 66(40) ஓட்டங்களையும் ஜெர்ஹார்ட் எறமுஸ் 32(22) ஓட்டங்களை பெற்றனர்.
நமீபியா அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் பிரெட் கிளஸின், கொலின் அக்ரிமேன், டிம் வன் டர் குக்டன், பீட்டர் சீலர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக டேவிட் வைஸ் தெரிவு செய்யப்பட்டார்.

நாளையதினம் பிற்பகல் 3:30 இற்கு பங்களாதேஷ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றவுள்ளது மாலை 7:30 இற்கு ஓமான் மற்றும் ஸ்காட்லாந் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றவுள்ளது.

இலங்கை  உலக கிண்ண தொடருக்கு தெரிவானது

Social Share

Leave a Reply