தாய்ப்பால் நன்கொடை – அமெரிக்க பெண் சாதனை!

அமெரிக்க தாய் ஒருவர் 1599.68 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இவர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு பிள்ளைகளின் தாயான எலிசபெத் ஆண்டர்சன் சியரா, 2015ம் ஆண்டு பிப்ரவரி 20, முதல் 2018ம் ஆண்டு ஜூன் 20ம் திகதி வரை1599.68 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இவரது தாய்ப்பாலை வழங்கி பல குழந்தைகளை காப்பாற்ற முடிந்ததாகவும், குறிப்பாக ஆயிரக்கணக்கான குறைமாத குழந்தைகளுக்கு வழங்க முடிந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015 முதல் 2108 வரையிலான மூன்று வருடங்கள் மட்டுமே உலக சாதனைக்காக கணக்கிடப்பட்டுள்ள போதிலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில் அவர் 350,000 அவுன்ஸ் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply