மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும், கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு திசையில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கசந்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் ஏனைய கடல் பகுதிகள் சற்று கொந்தளிப்பாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0-2.5 மீற்றர் வரை உயரக் கூடிய சாத்தியம் காணப்படுவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.