நேற்று இலங்கை முழுவதும் 200 இற்கு உட்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பித்தன. இருப்பினும் பிள்ளைகளும், ஆசிரியர்களும் வருகை தந்தது மிகவும் குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16% மாணவர்களும், 26% ஆசிரியர்களும் வருகை தந்ததாக தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமானவர்கள் வருகை தந்ததாக சுட்டி காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் 39% மாணவர்களும், 46% ஆசிரியர்களும் வருகை தந்ததாக தெரிவித்த அவர், மேல்மாகாணத்தில் 7% ஆசிரியர்கள், மாணவர்களே பாடசாலைகளுக்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏனைய மாகாணங்களில்,15% மாணவர்களும், 18% ஆசிரியர்களும் வருகை தந்ததாக அவர் கூறியுள்ளார்.
அதிபர் ஆசிரியர்களின் போராட்டம், விடுமுறைகளின் பின்னரான வியாழக்கிழமை பாடசாலை ஆரம்பம் போன்ற காரணங்களினால் மாணவர்கள் வரவு குறைவாக காணப்பட வாய்ப்புகளுள்ளன. திங்கட்கிழமை சரியான வரவினை எதிர்பார்க்கலாம் என நம்பப்படுகிறது.
