கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பதவியிலுள்ள அனுராதா யஹம்பத் முக்கிய இன்னுமொரு பதவிக்கு நியமிக்கபப்டும் வாய்ப்புகள் உள்ளதாக தெரியவருகிறது.
அண்மையில் வட மாகாண ஆளுநர் பி.எம் சார்ள்ஸ் திடீரென நீக்கப்பட்டு ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டார். இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அரசாங்கம் அழுத்தங்களுக்கு மத்தியில் நகர்ந்து செல்வதனால் இவ்வாறான மாற்றங்கள் செய்யபப்டுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
