ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (28.07) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவருடன் 22 பேர் கொண்ட பிரமுகர் குழுவும் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரேஷ்ட வெளியுறவுக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் முரகாமி மனாபு மற்றும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் அரிமா யுடகா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளனர்.
ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் அமுற்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிப்பதற்காக இந்த குழு இணையவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.