நாட்டில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!

இலங்கை பல் மருத்துவ சேவையில் பற்றாக்குறையாக உள்ள சுமார் 270 அத்தியாவசிய மருந்துகளை அவசர கொள்முதல் நடவடிக்கையின் கீழ் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து பற்றாக்குறை காரணமாக மருத்துவமனை அமைப்பில் உள்ள பல் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக, அரசு பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கம், சுகாதார அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, பல் மருத்துவ சேவையை நடத்துவதற்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களை உடனடியாக கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply