மத்திய கிழக்கு நாடொன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 62 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தற்காலிக விமான அனுமதியின் கீழ் நாடு கடத்தப்பட்டவர்களை இலங்கை தூதரகம் இன்று (28.07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது.

அவர்களில் 59 பேர் இல்லத்தரசிகள், மீதமுள்ள மூன்று பேர் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வீட்டு சேவைக்காக ஒப்பந்த வீடுகளை விட்டு வெளியேறி, தற்காலிக விடுதிகளில் தங்கி, விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக  குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply