சீனாவின் கடற்படை தளம் இலங்கையில்?

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் தளத்தை அமைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக வர்ஜீனியாவில் உள்ள வில்லியம் & மேரி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட Aid Data ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு ஏற்கனவே சீனா 2.13 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதால், சீனாவின் இலக்குகளை அடைந்துக்கொள்ள இது அதிக வாய்ப்பாக அமையும் எனவும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் வெளிநாட்டு இராணுவ தளம் தற்போது ஆபிரிக்காவின்-ஜிபூட்டியில் (Djibouti) மட்டுமே இயங்கிவரும் நிலையில், தற்போது இலங்கையும் அந்த பட்டியலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மிக முக்கிய கடல் போக்குவரத்துகளுக்கும், உளவு நடவடிக்கைகளுக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டுவரும் நிலையில், தெற்காசியாவில் ஓர் பதற்ற நிலை ஏற்படும் நிலை உள்ளதாகவும் வில்லியம் & மேரி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply