சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்களின் பின்னர் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இயக்குனர் பி.வாசுவின் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில், கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
வைகைப்புயல் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு, எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். லைகா நிறுவனதின் தயாரிக்கும், ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் வடிவேலு ‘சந்திரமுகி 2’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் என படக்குழு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.