இந்தியாவில் பஸ் விபத்து – 6 பேர் பலி!

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (29.07) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 30 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இம்மாத ஆரம்பித்திலிருந்து இதுவரையில் குறித்த புல்தானா பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டு 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply