தாய்வானுக்கான இராணுவ உதவியாக 345 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த உதவி தொகுப்பில், சீனாவை எதிர்கொள்ள தேவையான ஆயுதங்கள், தாய்வான் மக்களுக்கு தேவயைான பாதுகாப்பு, கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை உள்ளடங்கும் என வெள்ளை மாளிகை நேற்று (28.07) அறிவித்துள்ளது.
அமெரிக்கா, தாய்வானுக்கு இவ்வளவு பெரிய உதவி தொகுப்பை வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அமெரிக்க சட்டமியற்றும் அதிகாரிகள் தாய்வானுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்துமாறு பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகைக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த உதவி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு, சீன இராஜதந்திரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.