தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா இராணுவ ஒத்திகையில் இன்று (19.08) ஈடுபட்டுள்ளது.
தைவானின் துணை ஜனாதிபதியான வில்லியம் லாய் அமெரிக்கா சென்று திரும்பியுள்ள நிலையில், சீனா தனது இராணுவ நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.
இதன்படி தைவானில் கடற்படை மற்றும் விமானப்படையின் கூட்டு வான் மற்றும் ரோந்து பயிற்சிகளை சீனா ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து சீனா பதிலடி கொடுத்து வருகின்றது.