வவுனியா, பாலமோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் சடலமொன்று இன்று (29.07) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேப்பங்குளத்தை சேர்ந்த சற்குணராசா திசாந்த் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் உடலில் தோட்டாக் காயங்கள் காணப்படுவதாக சடலத்தை முதலில் கண்ட தோட்டத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பது இதுவரையில் தெரியவரவில்லை எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மரணம் தொடர்பில் ஓமந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.