சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் உயரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருவேறு சந்தர்ப்பங்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் மாரடைப்பு காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் சென்றிருந்த அவர், மீளவும் யாழ்ப்பாணம் திரும்புவதற்காக விமான நிலையம் வந்திருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இலங்கையில் இருந்து சென்னை சென்ற ஒருவரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவரும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக சென்னை விமான நிலையா வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகள் குறித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.