நாட்டு மக்கள் கஷ்டப்படும் போது, வங்குரோத்து நாட்டிலுள்ள இந்த அரசாங்கம் மக்களின் தோளில் ஏறி கொமிஸ் அடிப்பதாகவும், ,இந்த வங்குரோத்து நாட்டில் நாட்டு மக்களை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்லும் வகையில் சுகாதார அமைச்சர் செயற்படுகிறார் என்றும்,சுகாதாரத்துறை முழுவதும் இலஞ்சம் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இன்று (30.07) அனுராதபுரத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தரக்குறைவான மருத்துவத்தால் உயிர்கள் பறிபோய்விட்டன என்றும் இவ்வாறான நிலையில் நாட்டில் தெளிவான மாற்றம் தேவை என்றும், இது மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதனால்,
இந்நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வந்து சிறப்பான ஆட்சியை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் மக்கள் ஆணைக்கு செல்ல தயாராகுங்கள் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்று தெரிவித்த அவர், மக்கள் சார் அரசை உருவாக்க தயாராக இருப்பதாகவும் கூறினாரி்.
தேர்தல்கள்,பொதுமக்களின் கருத்துக்களுக்கு அஞ்சாமல் இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக் கொண்டு உடனடியாக தேர்தலுக்கு செல்லுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
நாளுக்கு நாள் நமது நாட்டு மக்கள் நலிவடைந்த ஆட்சியினால் வறுத்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, மக்களின் வாழ்க்கை அழிவின் விளிம்பில் உள்ளதோடு, சாதாரண மக்களுக்கும் பெரும் இருளில் மூழ்கியுள்ளனர் என்றும்,விவசாயிகளுக்கு தங்கள் நெல்லை நிர்ணயித்த விலைக்கு விற்க முடியாமல் இருப்பதாகவும்,60 முதல் 70 ரூபாவுக்கு அரிசி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளால் தமது செலவுகளை நிர்வகிக்க முடியாது போயுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.
தமது அத்தியாவசிய சேவைகளைக் கூட செய்ய முடியாமல் கடனில் மூழ்கி தவிக்கும் நேரத்தில் சேனாப்பூச்சியின் அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.