டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் 56,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 50% மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

கேகாலை, கண்டி, குருநாகல் போன்ற மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்கு நுளம்புகள் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply