இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல டிப்போக்களை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரோவ்பதான, பொலன்னறுவை, கபிதிகொல்லாவ மற்றும் கந்தளே ஆகிய டிப்போக்களுக்கு சொந்தமான பேருந்துகளின் ஊழியர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

ஹொரோவ்பதான பகுதியில் இலங்கை போக்குவரத்து பேருந்தின் பரிசோதகரை தனியார் பேருந்துகளின் ஊழியர்கள் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திடீர் வேலைநிறுத்தம் காரணமாக காலையில் பல்வேறு தேவைகளுக்காக பயணிக்க வந்த பயணிகள் பலர் தற்போது பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Social Share

Leave a Reply