வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான வறட்சியான காலநிலை பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள சுமார் 6,000 மழைநீர் தொட்டிகள் வறண்டுவிட்டதாக கூறப்படுகிறது. அவற்றுள் அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அமைந்துள்ள பல ஏரிகளும் அடங்கும்.
இதேவேளை, வறட்சியான காலநிலை காரணமாக உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக உடவலவ நீர்த்தேக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சலை போதியளவு பெற்றுக்கொள்ள முடியாது என விவசாயிகள் கவலை வெளிளயி்டுள்ளனர்.
அத்துடன் நீர்மட்டம் குறைவதன் காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மின் துண்டிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.