கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (31.07) முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். வடகிழக்கில் நிரந்தரமான அரசியல் தீர்வை வலியுறுத்துவதுடன், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரபகிர்வொன்றை சீர்தூக்கிப்பார்க்கவேண்டும் என்ற பிரகடனத்தை முன்வைத்தனர்.
அத்துடன் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், கௌரவமான உரிமைகளுக்கான மக்களின் குரல், வடகிழக்கில் அதிகார பரவலாக்கம் என்பது ஜனநாயக உரிமையாகும், போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.