தேசிய கீதம் பிழையாக பாடப்பட்டதா?

“2023 லங்கா பிரீமியர் லீக்“ (LPL) ஆரம்ப விழாவில் தேசிய கீதம் திரிபுபடுத்தப்பட்டு பாடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தேசிய கீதத்தை தனி நபரின் விருப்பத்திற்கு ஏற்க திரிபுபடுத்துவது அரசியலமைப்பிற்கு முரணான செயலாகும் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஒரு விழாவில் தேசிய கீதம் இசைத்தல் திரிபுபடுத்தப்பட்டு பாடப்பட்டமை வருத்தமளிக்கிறதும் என்றும் குறித்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச நேற்று (30.07) மாலை இடம்பெற்ற நான்காவது “LPL“ போட்டியின் ஆரம்ப விழாவில் தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடியதாக சமூக ஊடகங்களில் பல குற்றச்சாட்டுள் முன்வைக்கப்பட்டிருந்தது.

தேசிய கீதத்தின் சில வரிகளை குறித்த பாடகி மீண்டும் மீண்டும் தவறாக பாடியதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகள் எத்தணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply