பரபரப்பான கொழும்பு, கண்டி மோதல் நிறைவு

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான இன்று(31.07) கொழும்பு,ஆர். பிரேமதாச மைதானத்தில் பி-லவ் கண்டி மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கான போட்டியில் கொழும்பு அணி 27 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெறுவதற்கு கடினமான போட்டியில் மிகவும் சிறந்த பந்துவீச்சு மூலம் இந்த வெற்றியினை பெறக்கூடியதாக அமைந்தது. குறிப்பாக ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா மற்றும் மதீஷ பத்திரன சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை கைப்பற்றினார்கள். சுழற்பந்துவீச்சாளர்களும் அழுத்தம் கொடுத்து பந்து வீசினர். ஜெப்ரி வண்டர்சாய் மத்தியூஸின் விக்கெட் அடங்கலாக இரண்டு விக்கெட்களை ஒரே ஓவரில் கைப்பற்ற கண்டி அணியின் தோல்வி உறுதியானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. கண்டி அணியின் இறுக்கமான பந்துவீச்சின் மூலம் கொழும்பு அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. 158 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை துரதியடிக்க முடியாமல் கண்டி அணி தோற்றுப்போனது.

கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப இரண்டு விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், பபர் அஸாம், நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து 60 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பகிர்ந்து அணியை மீட்டனர். பபர் அஸாம் அரைச்சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். இந்த துடுப்பாட்டமே அவர்களுக்கு வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்தது.

கொழும்பு அணி நேற்றைய முதற் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
தனுக டபரேL.B.Wநசீம் ஷா040610
தினேஷ் சந்திமால்Bowledமதீஷ பத்திரன101120
கமிந்து மென்டிஸ்Bowledநசீம் ஷா151020
அஞ்சலோ மத்யூஸ், ஜெப்ரி வன்டர்சே252221
அஷேன் பண்டாரBowledஜெப்ரி வன்டர்சே121401
வனிந்து ஹசரங்கபிடி – நிரோஷன் டிக்வெல்லமதீஷ பத்திரன090410
சர்பராஸ் அஹமட்  162110
அமீர் ஜமால்Bowledமொஹமட் நவாஸ்070900
இசுரு உதான,பிடி – மொஹமட் நவாஸ்மதீஷ பத்திரன071100
முகமட் ஹஸ்னைன்  07121 
       
       
உதிரிகள்  18   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்130   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
நசீம் ஷா04001902
சா மிக்க கருணாரட்ன04002800
மதீஷ பத்திரன04002403
ஜெப்ரி வன்டர்சே04003202
மொஹமட் நவாஸ்04001801
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நிரோஷன் டிக்வெல்லL.B.Wஇசுரு உதான040410
பாபர் அஸாம்பிடி – கமிந்து மென்டிஸ்இசுரு உதான595241
பத்தும் நிஸ்ஸங்கRun Out 151220
நுவனிது பெர்னாண்டோபிடி – அஷேன் பண்டாரமுகமட் ஹஸ்னைன்283121
தனஞ்சய லக்ஷான்பிடி -டில்ஷான் மதுசங்கஹர்தூஸ் விலோஜன்121111
மொஹமட் நவாஸ்Bowledமுகமட் ஹஸ்னைன்100620
சாமிக்க கருணாரட்னRun Out 090401
ரமேஷ் மென்டிஸ்பிடி -டில்ஷான் மதுசங்கஹர்தூஸ் விலோஜன்060310
      
      
      
உதிரிகள்  04   
ஓவர்  20விக்கெட்  06மொத்தம்157   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
இசுரு உதான04003903
முகமட் ஹஸ்னைன்04002702
முஜீப் உர் ரஹ்மான்04002800
அமீர் ஜமால்01001500
வனிந்து ஹசரங்க04002200
தனுக டபரே02001400
கமிந்து மென்டிஸ்01000800

Social Share

Leave a Reply