கபுலுமுல்லை ரஜமஹா பத்தினி ஆலயத்தின் வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு கேகாலை அவிசாவளை வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கபுலுமுல்லை ரஜமஹா பத்தினி ஆலயத்தின் வருடாந்த ஊர்வலம் இன்று (05.08) இரவு ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி கேகாலை அவிசாவளை வீதியூடாக பயணிக்கவுள்ளது.
இதன்காரணமாக இரவு 09.00 மணி முதல் அதிகாலை 03.00 மணி வீதி தடைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.