திருமண வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கனேடிய பிரதமர்!

18 ஆண்டுகால திருமண வாழ்விலிருந்து விடுபட தானும் தனது மனைவியும் தயார் என கூறி தமது விவகாரத்து குறித்த தகவலை கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை இட்டு இந்த விடையத்தை தெரிவித்துள்ளார்.

Sophie Grégoirei மற்றும் ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 18 ஆண்டு திருமண உறவின் மூலம் இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் ட்ரூடோ இந்த வாரத்திற்குள் தனது விவகாரத்து குறித்து பகிரங்கமாக அறிவிக்கலாம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருவரும் சட்ட ரீதியான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளத்துடன், தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பல இளைய தலைமுறையினரின் முன்மாதிரியான பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் இந்த அறிவிப்பு கனேடிய மக்களுக்கும், உலக மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தும் செய்தியாகவே இருக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply