இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தை முகாமைத்துவம் செய்வதற்கான இடைக்கால நிர்வாக குழு ஒன்று விளையாட்டு துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மூலமாக இந்த நியமனம் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் க.மகேசனால் வெளியிடப்பட்டுள்ளது.
A.G.C தேசப்பிரிய தலைவராகவும், திருமதி N.K கப்புறுபண்டார செயலாளராகவும், K.A.R.C கஹந்தவல பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன ஊழியர்களது சம்பளம், ஊழியர் நலன் சார் கொடுப்பனவுகள், சேவைக்கட்டணங்கள், அரசாங்க வரி, ஊழியர் சேமேலாப நிதி போன்ற கொடுப்பனவுகள், சிறிய செலவினங்களுக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த இந்தக் குழு நியமிக்கபப்ட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 14 ஆம் திகதி காற்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச்சபை கூடி, தேர்தல் நடாத்துவது தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது. தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாக குழு நியமிக்கப்படும் வரை இந்த இடைக்கால நிர்வாக குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.